நன்றி: திரு. சுப்பு கணேசன்

திரு.வி.க, மு.வ, தமிழண்ணல். திரு.வி.க, மு.வ, இவர்கள் இருவரையும் வழிகாட்டிகளாக தனது வாழ்நாள் முழுவதும் போற்றி வந்தார். மு.வ அவர்களின் திருருவப் படத்தை தான் வணங்கும் தெய்வங்களுக்கு நிகராக தொழுது வந்தார். மரணத்தின் தருவாயில் இருக்கும் நிலையில், “என் காலம் முடிந்தது; எனக்கு நிறைவான வாழ்க்கை; இனியும் மருத்துவமணைக்கு எடுத்துச் சென்று என்னை துன்புறுத்த வேண்டாம்; மு.வ, திரு,வி.க போல இயற்க்கை மரணமே வேண்டும்..: என்று தெள்ளத்தெளிவான சிந்தனையோடு வேண்டுகோள் விடுத்துள்ளார். இறுதி நிமிடம் வரை உரத்த குரல், தீர்க்கமான, திண்மையான முடிவுகள்; அவர் வாழ்வை எவ்வாறு தேர்ந்தேடுத்துக்கொண்டாரோ அவ்வாறே தன் இறப்பையும் தேர்ந்தேடுத்துக்கொண்டார்.